தமிழ் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மறவன்புலவு மத்தி வெண்ணிலா விளையாட்டுக் கழகத்தினரால் பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்று (14) நடாத்தபட்டன.
தமிழர் கிராமிய மரபிலிருந்து மருகிவரும் கிழித்தட்டு விசேட விளையாட்டாக நடாத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீர்நிரப்புதல், சாக்கோட்டம், தேசிக்காய் கரண்டி ஓட்டம், வரிசை பலூன் ஓட்டம், மா ஊதி இனிப்பு எடுத்தல், கிளித்தட்டு போன்ற விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன இதில் ஆண்,பெண் இது பாலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விளையாட்டுக் கழக தலைவர் பி.புஸ்பமாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறவன்புலோ இளைஞர் கழகதலைவர் ஜெ.தேனுயா மற்றும் மாலதியணி தலைவி ஜெ.சிந்துஜா , சோதியாயணி தலைவி கு.அருந்தவமலர் மற்றும் சிறுவர்கள் சார்பில் ஜெ.கபிஷாந் ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது.