நாட்டில் குறைந்த வருமானத்தினை பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன் பலாபலன் மறவன்புலோ கிராமத்திற்கும் இன்றையதினம் (22.04.2024) சென்றடைந்தது.
மறவன்புலோ மத்தியில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் அலுவலகத்தில் கிராம உத்தியோகத்தர் தனுசாந்த் தலைமையில் பொருளாதார உத்தியோகத்தர் தயாபரன், சமுர்த்தி உத்தியோகத்தர் நிரோசன் சஜிதா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
மறவன்புலவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கின்ற குடும்பங்களுக்கு இந்த அரிசி வழங்கி வைக்கப்பட்டதாகவும். புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்கின்ற குடும்ப உறுப்பினர்களை அங்கத்தவர்களாக கொண்ட குடும்பங்களுக்கும் மறவன்புலவு கிராமத்தில் வசிப்பிடமாக கொண்டிராத குடும்பங்களுக்கும் அரிசி வழங்குவதில்லை என்ற தீர்மானத்தினை எடுத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.