சர்வதேச மகளிர் தினம் இன்று ( 26) தென்மராட்சி பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
பிரதே செயலர் திருமதி உஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தென்மராட்சி பிரதேசத்தில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சுயதொழில் உற்பத்தியில் சமூகத்தில் முன்மாதிரியாக செயல்பட்டமைக்காக மறவன்புலோ மத்தியை சேர்ந்த சமூக சேவையாளர் பிரதாப் புஷ்பமாலா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதேவேளை சாவகச்சேரி பிரதேச சபையும் கைதடி மாதர் சங்கங்களின் ஒன்றியமும் இணைந்து கைதடி அன்னை ரத்தினம் மணிமண்டபத்தில் நடாத்திய மகளிர் தின நிகழ்விலும் திருமதி பிரதாப் புஷ்பமாலா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினருடனான இறுதி யுத்தத்தில் தனது கணவர் காணாமல் போன நிலையிலும் தனியாக நிலைதடுமாறாது அன்பு உற்பத்தி நிலையம் என்ற ஒன்றினை உருவாக்கி பல பெண்களை ஒன்றிணைத்து எமது கிராமத்துக்கு அழகு சேர்க்கும் பனை மரங்களில் ஓலையினை பயன்படுத்தி அழகுப் பொருட்கள் பயன்பாட்டு பொருட்களை உற்பத்தி செய்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதோடு வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார் அவரின் உற்பத்திக்கு மிகச் சிறந்த வரவேற்பு இருக்கின்றது அந்த வகையில் மறவன்புலவுக்கு பெருமை சேர்க்கும் சமூக சேவகி மாலாவை மறவன் மறவன்புலோ இணையம் வாழ்த்துகின்றது.