மறவன்புலோ பாரதி தாய்மார்கழகத்தின் ஏற்பாட்டில் மறவன்புலோ ஆரம்பசுகாதாரநிலையத்தில் போசணைக்கண்காட்சி இன்று (27) இடம்பெற்றது.
வேள்ட்விஷன் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் நிறைகுறைந்த பிள்ளைகளிற்கான போஷாக்குத்திட்ட செயற்பாடுகளில்பங்குபற்றிய சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் இக்கண்காட்சியில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சாவகச்சேரி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி திரு. கணேஸ்வரன் சாய்கேஷன்
மறவன்புலோ கிராம அலுவலர் பொ.தனுஷாத்
மறவன்புலோ அபிவிருத்தி உத்தியோகத்தர். தயாபரன் வேள்ட்விஷன் நிறுவனத்தின் சாவகச்சேரி பிரதேச போஷாக்குத்திட்ட இணைப்பாளர்,
மறவன்புலோ குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.