![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0004.jpg?fit=1024%2C768&ssl=1)
வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன்பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நேற்று(11) நடைபெற்றது.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0034.jpg?resize=640%2C480&ssl=1)
நாவற்குழி மகாவித்தியால மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கைதடி வலையத்தில் காணப்படும் 08கிராம அலுவலர் பிரிவில் காணப்படும் சிறுவர் விளையாட்டு கழகங்களுக்கு இடையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0016.jpg?resize=640%2C480&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0011.jpg?resize=640%2C480&ssl=1)
வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம் பெற்ற விளையாட்டு நிகழ்வில் நிறுவனத்தின் முகாமையாளர்,வேள்ட்விஷன்நிறுவன உத்தியோகத்தர்கள்,அரச அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0010.jpg?resize=640%2C480&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0008.jpg?resize=640%2C480&ssl=1)
விருந்தினர்கள் அனைவரும் மைதான வாயில் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர்.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0004.jpg?resize=640%2C480&ssl=1)
இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு தேவாரம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றல்நிகழ்வு இடம்பெற்றது.தேசியக்கொடியேற்றப்பட்டதன் பின்னர் வேள்விஷன் நிறுவனக்கொடியும் தொடர்ந்து சிறுவர்கழகங்களின் கொடிகளும் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து பழம் பொறுக்குதல்,பலூன் உடைத்தல், பந்து பரிமாறுதல்,சாக்கோட்டம்,வளையம்போடுதல்,கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றன.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0010-1.jpg?resize=640%2C480&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0007.jpg?resize=640%2C480&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0001.jpg?resize=640%2C480&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240412-WA0021.jpg?resize=640%2C288&ssl=1)
அனைத்து விளையாட்டிலும் எமது மறவன்புலவு சிறுவர்கழகசிறுவர்கள் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுக்கொண்டதுடன் இரண்டு சம்பியன்களையும் தமதாக்கிக் கொண்டனர்.
08சிறுவர்கழகங்களுடன் போட்டியிட்டு 02ம் இடத்தைப்பெற்றுக்கொண்டனர்.