2022(2023) க.பொ.த(கா/த)ப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டுமுகமாக அவர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாதை பொருத்தும் பணி இன்று (13) சகலகலாவல்லி வித்தியாலத்தில் நடைபெற்று முடிந்ததது.
பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச இணைப்பாளர் இ.சிவரூபன் தலைமையில் ஆசிரியர் பரணீதரன், செல்வராணி மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி சிவாகுலன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் குறித்த பணிகள் நிறைவடைந்தன.
மறவன்புலவு தனங்களப்பு மக்கள் அனைவராலும் ரைவர் சண்முகம் என அன்போடு அழைக்கப்பட்ட அமரர் நாகமணி சண்முகத்தின் ஞாபகார்தமாக லண்டனில் வாழும் அவரது புதல்வர் சண்முகம் குகேசன் குறித்த திட்டத்தினை நிறைவு செய்வதற்காக இலண்டனில் இருந்து £62×400=24800 ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் இலண்டன் கிளையிடம் வழங்கியிருந்தார்.
குறித்த பணம் சர்வதேச இணைப்பாளர் இ.சிவரூபன் ஊடாக சாவகச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரார் பிறிண்டேர்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலப்பட்டு பதாதை அமைக்கும் பணிகள் இன்றையதினம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்ட பணம் அதற்கான செலவினங்கள் பற்றுச்சீட்டு என்பனவற்றை நிதி வழங்கியோருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன். பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஆவணத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதாதையினை அமைக்கும் பணியில் சதுர உதவி வழங்கிய பழைய மாணவர்களான செல்வநாயகம் விஜயகுமார், பாலசுப்பிரமணியம் சுதர்சன், சபாநாதன் தமிழ்அழகன் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொன்கின்றோம்.