*பாராட்டி வாழ்த்துகின்றோம்* யா/ மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயம். மறவன்புலோ சாவகச்சேரி, இலங்கை.இம்முறை எமது பாடசாலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் தோற்றி அதில் மூன்று மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர். அவர்களை பாடசாலைச் சமூகம் மென்மேலும் பல சாதனைகளை விருதாக்கி வாழ்க்கையில் சிறந்துவிளங்க பாராட்டுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
தம்பிராசா பானுப்பிரியா -162 புள்ளி
சிவமயூரன் ஜானுசா-156
விஜயகுமார் அக்சயன் -149
இரண்டு மாணவர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றனர்.
நகுலேஸ்வரன் தருண் -145
ரஜீகரண் கயானிகா-135
அரவிந்தன் அபிநயா -97
மற்றும் விஷேட தேவையுடைய மாணவன் பஹிரதகுமார் தனூசன்- 52இவர்களை கற்பித்த ஆசிரியர் *திருமதி ஜெயந்தி சிவானந்தம்* அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.அத்துடன் மாணவர்களுக்கு துணை நிற்கும் பெற்றோருக்கும் எமது நன்றிகள்.2011 பாடசாலை மீள் திறந்ததற்கு பின்னர் இதுவே முதல் முறை பெறப்பட்ட சிறந்த பெறுபேறு என்பது குறிப்பிடத்தக்கது.அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.அதிபர்திரு.சொ.ஜேசுதாஸ்.யா/மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயம்.