Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
அனைவருக்கும் வணக்கம்
மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் இவ் ஆண்டின் பங்குனி மாதம் முதல் புதிதாக கடமையேற்றுள்ள அதிபர் அவர்களுக்கு புலம்பெயர் வாழ் பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அதிபர் அவர்களுடன் பழைய மாணவர் சங்க செயற்பாடுகள் தொடர்பாக தொலைபேசியில் கலந்துரையாடிய போது பழைய மாணவர் சங்கத்தை மீளுருவாக்கம் செய்து புதுப்பொலிவுடன் சங்க செயற்பாடுகள் வினைதிறன் மிக்கதாக இருப்பதை கேள்வியுற்று மகிழ்ச்சியுற்றோம். அவ்வேளை புலம்பெயர் வாழ் எம் தாய்மண் சமூகத்திற்கும் பழைய மாணவர்களுக்கும் இரண்டு வேண்டுகோளை விடுத்திருந்தார்.
பாடசாலையின் நிர்வாக மற்றும் கற்றல் விடயங்களை இலகுபடுத்துவதற்காக மடிக்கணணி(Laptop) ஒன்றையும் அத்துடன் மாணவர்களின் வாசிக்கும் திறன் மற்றும் பொது விடயங்களை அறியும் நோக்கில் குறந்த பட்சம் மூன்று உள்ளூர் பத்திரிகளை ( Newspaper’s) மாதந்தோறும் பாடசாலை நூலகத்திற்கு பெற்றுக்கொள்வதற்கும் உதவுமாறு அன்பு வேண்டுகோளாக விடுத்துள்ளார்.
இவ் உதவிகளில் அனைவரும் பங்குகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி
தொடர்புகளுக்கு
பழைய மாணவன் மாணிக்கவாசகர் ராஜீவன் – சுவிஸ்
WhatsApp or Viber 0041 76 830 31 41
அதிபர் சொலமன் ஜேசுதாஸ் – மறவன்புலோ சகலகலாவல்லி வத்தியாலயம்
WhatsApp or Viber 0094 77 887 9576