வட மாகாண பண்பாட்டுத்திணைக்களதின் அனுசரணையில் நல்லூர் மற்றும் தென்மராட்சி பிரதேச கலைஞர்கள் கலந்து கொள்ளும் “கலைஞர் சங்கமம் 2024” நேற்றையதினம் (30) நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரியங்களை கலை நிகழ்வுகள் ஊடாக முன்னெடுத்து கொண்டு செல்லும் கலைஞர்கள் ஒன்றிணைந்து தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் எமது கிராமத்தைச் சேர்ந்த கிராமிய கலைஞர் சிவராசா சுப்புலட்சுமி கலந்து ந்த சிறப்பித்தார்.
இவர் 1981 ஆம் ஆண்டு முதல் மறவன்புலவு, தனங்கிழப்பு, கைதடி நாவல்குழி, போன்ற கிராமங்களை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளை மேடை ஏற்றிய பெருமைக்குரியவர்.
கோலாட்டம், கரகாட்டம், கும்மி பாட்டு, சிறு நாடகம் , தனி நடனம், கவிதை கிராமிய பாட்டு உள்ளிட்டவற்றை மட்டுமல்லாது விடுதலைப் போராட்ட காலகட்டங்களில் புலிகளி புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் மகளிர் அணியின் பொறுப்பாளராக அன்றைய கால கட்டங்களில் செயல்பட்ட சைலஜா, மகேஷ் அல்லது அருள் நிலா, தமிழினி, போன்றவர்களின் நெறிப்படுத்தலில் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டிருக்கின்றார்.
பல பிரதேசங்களை சேர்ந்த கலைஞர்கள் சங்கமிக்கும் இந்நிகழ்வில் எமது கிராமக் கலைஞர்கள் கலந்து கொண்டது கிராமத்துக்கு பெருமை சேர்க்கின்றது.