அகில இலங்கை மாணவர் பாராளுமன்ற செயல் அமர்வில் எமது மறவன்புலவு கிராமத்தைச் சேர்ந்த ஏகானந்தன் கபில்ஷா பங்குபற்றி எமது கிராமத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அகில இலங்கை மாணவர் பாராளுமன்ற செயலமர்வு தேசிய கல்வி நிறுவகத்தில்(NIE) கடந்த 25.03.2024 அன்று நடைபெற்றது.
இதில் அகில இலங்கை ரீதியில் பல மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர் ஆயினும் வட மாகாணத்தில் பாடசாலை மட்ட, மாவட்ட மட்ட, மாகாணமட்ட, இடையில் நடாத்தப்பட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களில் தென்மராட்சி கல்வி வலையத்தில் இருந்து எமது கிராமத்தைச் சேர்ந்த ஏகானந்தன் கபில்ஷா கலந்து கொண்டமை பெருமைக்குரியது.
இவர் எமது சகலகலாவல்லி வித்தியாலய பழைய மாணவியாவார். கடந்த ஆண்டு க .பொ.த சாதாரண பரீட்சையில் சித்தி அடைந்து தற்போது சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் மாணவியாவார்.
பாடசாலையில் கல்வி பயின்ற காலத்தில் மிகவும் திறமையான குரல் வளம் கொண்ட ஒரு சங்கீத மாணவி சின்னத்தம்பி முன் பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்று அதன் பின்பு சகலகலா வல்லியில் இணைந்து சித்தி அடைந்து இன்று எமது கிராமத்துக்கு பெருமை சேர்ப்பது பாராட்டுக்குரியது. அவரை மறவன்புலோ இணையம் வாழ்த்தி நிற்கிறது.