சகலகலாவல்லி பாடசாலையில் பாவனையிலிருந்த நீர் இறைக்கும் மின்சார மோட்டார் கடந்த ஆண்டு காணாமல் போயிருந்தது. குறித்த மோட்டார் காணாமல் போனதன் காரணத்தினால் பாடசாலை மாணவர்கள் மலசலகூடப் பாவனை மற்றும் ஏனைய தேவைகளுக்காக மிகவும் சிரமப்பட்டிருந்தனர். இந்நிலையினை கண்ணுற்ற எமது பாடசாலை ஆசிரியர் பரணீதரன் அவர்கள் தனது புலம்பெயர்வாழ் நண்பர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி உடனடியாக சிறந்த நீர் பம்பியினை கொள்வனவு செய்து பாடசாலைக்கு வழங்கியிருந்தார்.
பாடசாலையில் இதுவரை நிலவிவந்த தண்ணீத் தேவைகள் பூர்த்தியாகியுள்ளது. மாணவர்களை மகிழ்ச்சியில் ஆற்றிய பணிக்கு உதவி புரிந்த புலம்பெயர் நலன்விரும்பி திருமதி றொபின்சன், றோகினி இவருக்கு எமது பழைய மாணவர்சங்கம் சார்பாகவும் பாடசாலை சமூகம் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது பிரதேசத்தினை சார்ந்தவர்கள் அல்லாது போனாலும் மாணவர்களின் நலன்கருதி குறித்த பரணீதரன் ஆசிரியரின் வேண்டுகோள் ஊடாக தேவையினை நிறைவேற்றிய அந்த நல்ல உள்ளங்கள் சலக செல்வங்களும் பெற்று நீடுடி வாழ வாழ்த்துக்கின்றோம்.
Related Stories
May 2, 2024