சுவிஸ் நாட்டின் நிட் வால்டன் தமிழர் ஒன்றியத்தினால் உறவுக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்தின் கீழ் தாயகத்தில் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் வகுப்பறை அபிவிருத்திப் பணிக்காக 65,000 ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அமைப்பின் தலைவர் முரளிதரன் அவர்கள் பாடசாலைக்கு நேரடியாக வருகை தந்து குறித்த பணத்தினை பாடசாலை அதிபரிடம் கையளித்துள்ளார்.
பாடசாலை பழைய மாணவர் சங்கம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது பாடசாலையில் காணப்படும் திறந்தவெளி மண்டபம் ஒன்றினை வகுப்பறையாக மாற்றுவதற்காக கல்வி திணைக்களத்திடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் ஏழு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனினும் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக குறித்த நிதியில் திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகளை செய்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் குறித்த நிதிமீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக செயற்பட்ட பழைய மாணவர் சங்கம் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்கள் இடமும் நலன்விரும்பிகள் இடமும் பொது அமைப்புகள் இடமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் விடுத்த வேண்டுகோளின் பேரில் முதற்கட்டமாக 65,000 ரூபாவினை சுவிஸ் நாட்டின் நிட் வால்டன் தமிழர் ஒன்றியம் வழங்கியுள்ளது சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் மேலதிகமாக தேவைப்படும் நிலையில் தமிழர் ஒன்றியம் வழங்கிய இந்த நிதி பேருதவியாக இருப்பதாக பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமான ஜேசுதாசன் தெரிவித்துள்ளார் ஏனையவர்களும் இந்த மிகுதி நிதியை வழங்குவதற்கு முன்வரவேண்டும் எனவும் அவர் தனது உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்