புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் திரு கனேஸ்வரன் அவர்கள் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்திற்கு நேரடியாக வருகைதந்திருந்த வேளை பாடசாலையில் கணினி இல்லை என்பதை அறிந்து அவர் பாவித்த மடிகணினி ஒன்றை பாடசாலைக்கு வழங்கியிருந்தார். அதேவேளை புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் மூவருக்கு துவிச்சக்கர வண்டியை கொள்வனவு செய்வதற்காக ரூபா ஒரு லட்சத்தையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அவருக்கு பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
Related Stories
May 2, 2024