மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் திறந்த மண்டபத்தினை 4 வகுப்பறைகளாக மாற்றும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது பாடசாலை அதிபர் ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி க. தங்கமணி திருமதி ச. புஷ்பலலிதா ஆகியோர் கூட்டாக முதல் கல் வைத்து ஆரம்பித்து வைத்தனர்
இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த வகுப்பறையின் அமைப்பதற்கு கல்வி அமைச்சினால் 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பணத்தில் அதனை செய்து முடிக்க முடியாது நிலை காணப்பட்டது இன்னிலையில் அதிரடியாக செயல்பட்ட பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் புலம்பெயர் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் இணைந்து குறித்த திட்டத்தினை நிறைவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபாவினை தொண்டர்கள் தன்னார்வ நிறுவனங்கள் பொது அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்திருந்தன இந்நிலையில் சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கிணங்க உள்ளூர் மக்களும் புலம்பெயர் மக்களும் பலரும் தம்மாலான இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார்கள் குறித்த உதவியினை கொண்டு வகுப்பறைகளை அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது அதனை நிறைவு செய்வதற்கு ஏனையோரும் தம்மாலான உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என பழைய மாணவர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது