
மதன் என எல்லோராலும் அறியப்பட்ட வரும் தற்போது கனடா நாட்டில் வசித்து வருபவருமான சுப்பிரமணியம் சுப தீபன் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய அபிவிருத்திப் பணிக்காக 30 ஆயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்க வங்கி கணக்கில் வைப்புச் செய்துள்ளார் பாடசாலை மீது அவர் கொண்டுள்ள பற்றையும் தான் பிறந்த கிராமத்தின் மீதும் தன் மண்ணின் மீதும் கொண்டுள்ள காதலை பாராட்டுவதுடன் அவரைப் போன்று எமது கிராமத்தை சேர்ந்த ஏனையவர்களும் முன்வர வேண்டும் என பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுகின்றது
