
டிரைவர் சண்முகம் என யாழ் குடாநாடு முழுவதும் பலராலும் அறியப்பட்டவரின் மகளான லண்டனில் வசிக்கும் திருமதி ரூபன் கௌரி அவர்கள் பாடசாலை அபிவிருத்திக்காக 120000/= ரூபாய் அன்பளிப்பு செய்துள்ளார் மறவன்புலவு தனங்கிளப்பு பகுதியை மையமாகக் கொண்ட இவர் சிறுவயது முதலே கலை கலாச்சார நிகழ்வுகளில் பங்கெடுத்து தமது திறமையை வெளிப்படுத்துவர் ஈழத்து திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக கிராமத்தை விட்டு நீண்ட தூரம் சென்று வசிக்கின்ற போதும் ஈழத்து மண் மீதும் கிராமத்தின் மீதும் எமது பாடசாலையின் மீதும் அவர் கொண்டுள்ள பற்றினை வார்த்தையினால் சொல்லிவிடமுடியாது அவரின் இந்த பேர் உதவியானது யுத்தத்தில் அழிவடைந்து மெல்ல மெல்ல வளர்ந்து வரும் எமது சகலகலாவல்லி வித்தியாலய பாடசாலைக்கு பேருதவியாக அமைகிறது அவரின் இந்த சமூகப் பணிக்காக நாம் கை கூப்பி வணங்குகிறோம்
