தற்கால செயற்பாடுகளை எதிர்காலத்தில் இளம் சந்ததியினர் அறிந்து கொள்வதற்காகவும் பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளை ஆவணப்படுத்தி அறிக்கை படுத்தும் முயற்சியாகவும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் பொருளாளரும் தற்போதைய சர்வதேச இணைப்பாளரும் ஆன இரத்தினம் சிவரூபன் அவர்கள் தனது சொந்தச் செலவில் ஆவணங்களை சேமிப்பதற்கான புத்தகங்கள் உறுப்பினர்களை இணைப்பதற்கான படிவங்களில் சேமிக்கப்படும் பணத்துக்கான பற்று சீட்டுக்களை வழங்குவதற்கான புத்தகங்கள் கடிதத் தலைப்புகள் முத்திரைகள் என பலவகையான ஆவணங்களை பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலையின் அதிபருமான யேசுதாஸ் அவர்களிடம் கையளித்துள்ளார்
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளராக செயற்பட்டு பாடசாலைக்கான பௌதிக வளங்களை உருவாக்குவதிலும் உள் வாங்குவதிலும் முன்னின்று உழைத்தவர் சிவரூபன் ஏற்கனவே கடந்த காலங்களிலும் தனது சொந்தப் பணத்தில் பாடசாலைக்கான பல உபகரணங்களை பெற்றுக் கொடுத்திருந்தார் பாடசாலைக்கான மைதானத்துக்கு வயல் காணிகளை கொள்வனவு செய்வதற்கு பழைய மாணவர் சங்கம் முயற்சித்தபோது பணப்பற்றாக்குறையை தகுந்த நேரத்தில் நிவர்த்தி செய்வதற்காக தனது சொந்தப் பெயரில் வங்கிக் கடன் பெற்று பணத்தை வழங்கியிருந்தார் சிவரூபன் ஆகவே அவரின் துணிவு சமூகப் பண்பு சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள பற்று மறவன்புலவு இருந்து சுன்னாகத்தில் திருமணம் முடித்து இருந்தாலும் மறவன்புலவு மண் மீதும்மீதும் பாடசாலை மீதும் அவர் கொண்டுள்ள பற்றை யாரும் மறந்துவிட முடியாது ஆகவே இந்தத் தருணத்தில் பழைய மாணவர் சங்கம் சார்பில் அவருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்
Related Stories
May 2, 2024