புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் தமது மேலதிக கல்வி நடவடிக்கையினை தொடர்வதற்கு பயன்படுத்துவதற்காக நலம் விரும்பி பரமநாதன் கணேஸ்வரன் துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை சமூகத்தினரால் கடந்த 18. 05. 2022 அன்று பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த மறவன்புலோ சேர்ந்தவரும் தற்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருபவருமான பரமநாதர் கணேஸ்வரன் 108000/= பெறுமதியான மூன்று துவிச்சக்கர வண்டிகளை பரீட்சையில் திறமைச் சித்தி எய்திய மாணவர்களுக்கு வழங்கியிருந்தார்
குறித்த மாணவர்கள் எதிர்காலத்தில் தமது கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நோக்கில் இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன
மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் நீண்ட காலத்துக்குப் பிறகு சாதனை படைத்த இந்த மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் அவர்கள் பின்னால் கல்வி கற்கும் ஏனைய மாணவர்களும் எதிர்காலத்தில் கல்வியில் சிறந்த பெறுபேற்றினை பெறுவதற்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பதாக அவர் தெரிவித்தார்.
ஒரு கிராமத்தின் கஷ்ட நஷ்டங்கள் ஒரு கிராமத்து பாடசாலையில் கல்வி பயில்வதன் சிரமங்கள் அனைத்தினையும் தாம் இந்த கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் அறிவேன். புலம்பெயர்ந்து சென்றாலும் வெளிநாட்டுப் பிரஜை என்ற புனைப் பெயருடன் உங்கள் முன் வந்திருக்கிறேன் ஆயினும் எனது கிராமம் இந்த கிராமம். இதுபோன்று எதிர்வரும் காலங்களிலும் இந்தப் பரீட்சையில் தோற்றி வெற்றி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பல ஊக்குவிப்பு பரிசில்களை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
தாய்நாட்டில் இருந்து 1980களில் விமானத்தில் பறந்து சென்று சிங்கப்பூரில் பணிபுரிந்த இவர் 1985 ஆம் ஆண்டளவில் மீண்டும் தாய் நாடு வந்து 1989 ஆம் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்து சென்று சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்தார். அந்நாட்டில் வசித்தாலும் தாய்நாட்டில் தான் பிறந்த மண் மீது அளவுகடந்த பற்று கொண்டவர் மறவன்புலோ மத்தி யில் அமைக்கப்பட்ட ஐயப்பன் கோவிலுக்கு குடிதண்ணீர் கிணறு இல்லாதது கண்டு உடனடியாகவே துளை கிணறு அமைத்து நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர் மறவன்புலோ மேற்கு முனியப்பர் கோவிலுக்கு மணி கோபுரம் அமைத்துக் கொடுத்தார் அதுமட்டுமல்ல மறவன்புலோ மத்தி யில் பழைய முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு ஆலயமணி ஒன்றினை அமைத்துக் கொடுத்தார் இதுபோன்று பல்வேறுபட்ட சமூகப் பணிகளை மறவன்புலோ கிராமத்துக்கு செய்து வருகின்றார் அவரின் இந்த சமூகப் பற்றினை மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலய பழைய மாணவர் சங்கம் வரவேற்பதுடன் அவருக்கு நமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்