மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான மதிய உணவை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட சமையலறை லெவல் சீட் அற்ற நிலையில் காணப்பட்டது இதனால் மாணவர்களுக்கான உணவினை சமைத்துக் கொடுப்பதில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக் காட்டப் பட்டது இதனையடுத்து விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பாடசாலை அதிபர் மற்றும் உப அதிபர் ஆகியோர் சாவகச்சேரியில் இரண்டு வர்த்தகர்களை அணுகி அவர்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தின் ஊடாக 52 ஆயிரம் ரூபாய் செலவில் 20 தர 12 அடி நீளமான சமையலறைக்கு லெவல் சீட் அடித்து முடிக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கைக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கிய ஐங்கரன் பேக்கரி உரிமையாளர் மற்றும் பொதிகை புத்தகக் கடை உரிமையாளர் ஆகியோருக்கு பாடசாலைச் சமூகம் சார்பிலும் பழைய மாணவர் சங்கம் சார்பிலும் பெற்றோர்கள் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்
Related Stories
May 2, 2024