தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் தலை நிமிர்வதற்கு மறவன்புலோ கிராமத்தில் காணப்படும் இந்த சகலகலாவல்லி வித்தியாலயம் பெரிதும் உறுதுணையாக இந்த ஆண்டு இருந்திருக்கிறது. என தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சகலகலாவல்லி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மறவன்புலவு கிராமம் ஒரு சிறிய கிராமம் இங்கு ஒரு சிறிய பாடசாலை அந்தப் பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் நகரப்புற பாடசாலையிலும் பார்க்க சிறந்த பெறுபேற்றை பெற்றிருப்பது பேரானந்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
பல சிரமங்களுக்கு மத்தியில் இங்கே பணிபுரிகின்ற ஆசிரியர்கள் நீண்ட தூரத்திலிருந்து குண்டும் குழியுமான வீதிகள் ஊடாக இந்தப் பாடசாலைக்கு வந்து செல்கின்றார்கள் அவர்கள் தங்களை அர்ப்பணித்து இந்த மாணவர்களை பரீட்சையில் சித்தியடைய வைத்திருப்பது என்பது பாராட்டத்தக்க விடயமாகும். அதுமட்டுமல்ல இந்தப் பாடசாலை நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் அனைவரும் இவ்வாறு சாதனை படைக்கும் மாணவர்களை கௌரவிக்க முன்வந்திருப்பது ஆனது பாடசாலையின் மீதும் மாணவர்களின் கல்வி மீதும் அவர்கள் அக்கறையாக கரிசனையாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது ஆகவே எதிர்காலத்திலும் மாணவர்களை பரீட்சையில் சித்தியடைய வைப்பதன் ஊடாக இப்பகுதி நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நிறைவேற்றுவதாக அமையும் என்று தெரிவித்தார்