
புலம்பெயர் தேசத்து உறவுகளின் கைகள் எமது பாடசாலையை நோக்கி நிற்பதால் இப்பாடசாலை உயர்நிலைக்கு கொண்டு போகக்கூடிய நிலைமை ஏற்பட்டதாக பாடசாலையின் அதிபர் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சிறப்ப சித்தியை எழுதிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் இங்கு நான் அதிபராக புதிதாக வந்தபோது சிறப்பான வரவேற்பு கிடைத்தது பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் பாடசாலையை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதற்கும் மாணவர்களின் கல்வியை உயர்வு நிலைக்கு கொண்டு செல்வதற்கும் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் பலர் தாமாகவே முன்வந்தனர் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் பல பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பழைய மாணவர் சங்க துடன் இணைந்து பாடசாலைக்கான அனைத்து நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றார்கள் அச்சமின்றி துணிவோடு எந்த காரியத்தையும் நாங்கள் சிறப்பாக இங்கு முன்னெடுக்க முடியும் ஏனெனில் அவ்வளவு ஒத்துழைப்பு இங்கே கிடைக்கின்றது அந்த ஒத்துழைப்புகளை வழங்கி வரும் அனைத்து நண்பர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்
