சாவகச்சேரி ரிபக் கல்லூரி ஆசிரியர் பழைய மாணவர் சங்கத்தினரால் அது நவீன நான்கு கணினிகள் எமது பாடசாலைக்கு அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றுள்ளன. மிக நெருக்குதலான காலகட்டத்தில் எமது பாடசாலையை பொறுப்பேற்று தலை நிமிரத் செய்த சொலமன் ஜேசுதாஸ் அவர்கள் பணியாற்றிய காலத்தில் கணினி வகுப்பறை ஒன்று திறக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். எனினும் பதவி உயர்வு கிடைக்கப் பெற்று பெரியதொரு பாடசாலையை பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் அவர் எமது பாடசாலையை விட்டு சென்று விட்டார். ஆயினும் அவர் பின் வழிவந்த உதவி அதிபராக செயல்பட்ட கிருபாகரன் அவர்கள் எடுத்த முயற்சியின் பலனாக நான்கு கணணிகள் எமது பாடசாலைக்கு கிடைக்க பெற்றுள்ளன. இதற்காக ஒன்றிணைந்து செயல்பட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவிப்பதோடு எமது மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்த இந்த கணணிகளை தந்துதவிய சாவகச்சேரி ரிபக் கல்லூரி ஆசிரியர் பழைய மாணவர் சங்கத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்