சகலாவல்லி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் நடைபெற்று முடிந்தது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிருஸ்ணப்பிள்ளை பிரதீபா – உதவிக்கல்விப் பணிப்பாளர், கௌரவ விருந்தினராக முன்னாள் அதிபர் சொலமன் ஜேசுதாசன் மற்றும் கௌரவ விருந்தினராக விஜயகுமார் விஜயகிருஸ்ணா சீலெக்ஸ் காற்றலை மின் உற்பத்தி நிலைய இயக்குனர். ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நகர பாடசாலைக்கு நிகரான ஏற்பாடுகளை எமது கிராம பாடசாலை செய்திருப்பது வியக்கத்தக்கதாக உள்ளது என பிரதம விருந்தினர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.