சகலகலாவல்லி வித்தியாலய விளையாட்டுப் போட்டி நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மறவன்புலவில் மின்உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சீலெக்ஸ் காற்றலை நிறுவனத்தினரால் போட்டி நிகழ்விற்கான கேடயங்கள், பரிசில்பொருட்கள் வழங்கியுள்ளது. இதேபோன்று எமது பாடசாலை வளாகத்தில் இயங்கிவரும் சின்னத்தம்பி முன்பள்ளி விளையாட்டுப்போட்டி நிகழ்விற்கான பரிசில்பொருட்களையும் குறித்த நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர ஞானகொட எமது பாடசாலைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றார். பாடசாலைக்கான தெற்கு பக்கம் மற்றும் மேற்குப் பக்கத்திற்கான சீமெந்திலான சுவர்கள், பாடசாலைக்கு நிழல்தரும் மரங்கள், நிழல்பிரதி இயந்திரத்திற்கான ரோனர்கள், பிள்ளைகளுக்கான புத்தகப்பைகள், றிங்கிங் போட்டல் போன்ற உதவிகளை ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டில் 19 இலட்சத்து 57 ஆயிரம் பெறுமதியில் பாடசாலைக்கும் சின்னத்தம்பி முன்பள்ளிக்கும் வர்ணம் தீட்டும் பணியினை நிறைவு செய்திருக்கின்றார்கள். தற்போது 69 ஆயிரம் பெறுமதியான பரிசில்பொருட்களை சீலெக்ஸ் நிறுவத்தின் மறவன்புலவு தனங்களப்பு அலுவலகத்தின் பதில் பொறுப்பதிகாரி வி.விஜயகிருஸ்ணா இன்றையதினம் 15.03.2024 நேரில் சென்று வழங்கியுள்ளார்.