வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் கும்பாவிசேக நிகழ்வு மிகவும் சிறப்பாக 24.03.2024 நடைபெற்று முடிந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ அம்பாளுக்கு குடமுழுக்கு இடம்பெற்றது.
செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வில் திறமைவாய்ந்த மூர்த்த சிவாச்சாரியார்கள் அம்பாளுக்கு குடமுழுக்கு நடாத்தி முடித்தனர். அரோகரா சத்தம் வானைப் பிளக்க கோபுரம் முழுவதும் நீரில் நனைந்த காட்சி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா இறைபதம் அடைந்ததன் பிற்பாடு சைவத்திற்கு தொண்டாற்றும் திரு ஆறுதிருமுருகன் ஐயா சிறப்பாக அம்பாள் ஆலயத்தினை நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.