தென்மராட்சி தெற்குப் பகுதியில் அமைந்து அடியவர்கட்கு அருள்பாலித்துவரும் வேலம்பிராய் அம்மன் ஆலய கும்பாவிசேக நிகழ்வு இன்று (25) நடைபெற்றது. குறித்த ஆலயம் யுத்தத்தினால் மிகவும் சேதமடைந்ததன் பிற்பாடு மிககடினமான பாதையை கடந்து ஆலய நிர்வாகம் இன்றையதினம் கும்பாவிசேகத்தினை நடாத்தி முடித்துள்ளது.
நீண்டநாட்களாக தென்மராட்சி தெற்கு மக்களின் மனத்தில் ஆழ்ந்த கவலையாக இருந்த விடையம் ஒன்று இன்றையதினம் நிறைவேறியிருப்பது அம்மன் அடியர்வர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எதிர்வரும் காலங்களில் சிறப்பான பூசை வழிபாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு கோவில் நிர்வாகசபை அழகான திட்டங்களையும் ஏற்பாடு செய்திருப்பது பெருமிக்கத்தக்கது.