மறவன்புலவு சகலகல சகலகலா வல்லி வித்தியாலயம் நகர பாடசாலைகளுக்கு நிகரான அனைத்து வசதிகளை கொண்டிருப்பதுடன் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளுக்கான வளங்களையும் கொண்டுள்ளது.
நவீன கட்டடம், தொலைபேசி வசதி, இணைய வசதி, கணினி கூடம், திறன் வகுப்பறை கூடம், அழகான சமையலறை , மல சல கூடம், சுத்தமான மழைநீர் சேகரிப்பு திட்டம், ஒளி ஒலிபெருக்கி சாதனங்கள், காவலாளி அறை, துவிச் சக்கர வண்டி தரிப்பிடம், சரஸ்வதி ஆலயம், நிழல் தரும் பயன் தரும் மரக்கன்றுகள், பாதுகாப்பு வேலி மற்றும் மதில்கள், கலை அரங்கம், நுழைவாயில் வளைவு , சங்கீத தாள இசைக் கருவிகள், அதிநவீன நிழல் பிரதி எடுக்கும் இயந்திரம், திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பாடசாலைக்கான பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வயல் நிலங்கள், பாடநேர பெல் உள்ளிட்ட இன்னும் பல பௌதிக வளங்களை தன்னகத்தே கொண்ட ஒரு கிராம பாடசாலையாக உங்கள் அனைவரினதும் பாடசாலை சகலகலாவல்லி விளங்குகின்றது.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/03/IMG-20240222-WA0014.jpg?resize=640%2C930&ssl=1)
இத்தனை பௌதிக வளங்களையும் உருவாக்குவதில் உள்ளூரிலும் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் ஆதரவளித்து இருந்தார்கள் அவர்களின் ஆதரவினால் இவைகள் அனைத்தும் பழைய மாணவர் சங்கத்துக்கு சாதகமானது. பாடசாலையின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டது. ஆயினும் இரண்டு முறை உமது பாடசாலையில் கணனி மற்றும் சோழர்கள் கயவர்களினால் களவாடப்பட்டன. அதனை தடுப்பதற்கு பழைய மாணவர் சங்கம் காவலாளி ஒருவரை மாபெரும் போராட்டத்திற்கு மத்தியில் நியமித்துக் கொண்டது. ஆயினும் அரசியலில் செல்வாக்கின் தன்மை அதிகாரத்தின் வலிமை ஆகிய இரண்டு எமது ஆசையினை நிராயுத ஆசையாக மாற்றியது. மிகவும் குறுகிய காலத்தில் குறித்த காவலாளி எமது பாடசாலையை விட்டு வேறொரு பாடசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் முன் வைத்த காலை நாம் பின் வைக்கவில்லை. எமது சொந்தச் செலவில் ஒரு காவலாளியை நியமித்து பாடசாலையின் பாதுகாப்பை உறுதி செய்து வந்தோம். அவருக்கான செலவினங்களையும் தொடர்ந்து வழக்குவதில் நமக்கு சிக்கல் நிலை தோன்றியது. அதிலும் தோற்றுப் போனோம். நீண்ட சிந்தனைக்கு பிறகு மீண்டும் ஒரு முயற்சியை எடுத்துள்ளோம். பாடசாலையின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்களை பொருத்துவதென தற்போதைய சூழ்நிலையில் ஒரு முடிவினை எடுத்துள்ளோம். நிரந்தரமான காவலாளி ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கமாக நடைபெற்று வரும் நிலையில் மறுமுனையில் சிசிடிவி கேமராவை பொருத்தும் பணியினை முன்னெடுப்பதில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கான திட்ட வரைவு பழைய மாணவர் சங்கத்தினரால் பாடசாலை அதிபரிடம் வழங்கப்பட்டு அதற்கான அனுமதியும் கிடைக்க பெற்றுள்ளது. எனினும் அதனை நிறைவேற்றுவதற்கு பெருந்தொகையான பணம் தேவைப்படுகின்றது. அதனை ஒரு தனி நபரால் செய்துவிட முடியாது ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டுமே தேர் நகரும் ஆகவே இந்தப் பணி நிறைவடைவதற்கு அனைத்து பழைய மாணவர்களினும் நலன் விரும்பிகளினதும் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற அன்பர்கள் நண்பர்களிடத்திலும் தங்கள் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். குறித்த திட்டம் நிறைவேறியே தீரும் அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதில் நீங்களும் ஒருவனாக பங்கெடுக்க விரும்பினால் பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி ஜே. சுபாஷினி அவர்களுடனும் பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச இணைப்பாளர் இ.சிவ ரூபன் அவர்களுடனும் மேலதிக தகவல்களுக்கு என்னுடனும் அல்லது சுவிஸ் நாட்டில் வாழுகின்ற ராஜீவன் தனேந்திரன் போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி
எஸ்.முரளி
பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளர்