சகலகலாவல்லி வித்தியாலய மெய்வல்லுனர் போட்டியை சிறப்பாக நடாத்துவதற்காக பழைய மாணவர் சங்கம் நிதிப்பங்களிப்பு வழங்கியுள்ளது. பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச தொடர்பாளர் இரத்தினம் சிவரூபன் பாடசாலைக்கு நேரில் சென்று குறித்த பணத்தொகையினை விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியரிடம் கையளித்துள்ளார்.
மறவன்புலோ மத்தி, கிழக்கு, மேற்கு, பகுதிகளையும் சார்ந்த எமது பாடசாலை பழைய மாணவர்கள் இதற்கான நிதியினை வழங்கியிருந்தார்கள்.
கு.கருணாதேவி 10000.00
கு.றஞ்சினி 10000.00
வி.விஜயகுமார் 5000.00
இ.சிவரூபன் 5000.00
கமலதாஸ் 3000.00
சி.சுப்புலட்சுமி 2000.00
க.தங்கமணி 1000.00
ஜெ.சுபாசினி 1000.00
த.செல்வராசா 1000.00
ந.அருள்தாஸ் 1000.00
த.ரகுகுமார் 1000.00
செ.ஆனந்தரஞ்சன் 1000.00
செ.ஆனந்தமாலா 1000.00
பு.குகதாஸ் 1000.00
ப.வசந்தமாலா 1000.00
ம.கலைவதனி 500.00
வே.ரமேஸ் 500.00
செ.தவமணி 500.00
நி.கோகிலா 500.00
14.03.2024 இன்றையதினம்வரையில் கிடைக்கப்பெற்ற நிதிப்பங்களிப்பின் பெயர் விபரங்களே வெளியிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 16.03.2024 நடைபெறவுள்ள விளையாட்டுப்போட்டியின்போது நிதிப்பங்களிப்பு வழங்கியவர்களின் முழுவிபரமும் வெளியிடப்படும்.
இந்த பணிக்காக முன்னின்று உழைத்த பழைய மாணவி க.தங்கமணி, கு.கருணாதேவி. சி.சுப்புலட்சுமி, பழையமாணவன் இ.சிவரூபன் போன்ற சமூக செயற்பாட்டாளர்களுக்கு பழைய மாணவர் சங்கம் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
எமது பாடசாலை யுத்தம் முடிவடைந்து மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் படிப்படியாக மாணவர் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது 2011ம் ஆண்டு பாடசாலை மீளஇயங்க ஆரம்பித்தபோது வெறுமனமே 14 பிள்ளைகளுடன் ஆரம்பித்தது. பின்னர் வருடாவருடம் அதன் எண்ணிக்கை அதிகரித்தபோதும் இந்த ஆண்டில் 12 வருடங்களில் பின்னர் 64 பிள்ளைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் விளையாட்டுப் போட்டியினை குறித்த மாணவர் தொகையினை பயன்படுத்தி அவர்களிடமிருந்து கிடைக்கும் நிதிப்பங்களிப்பினை வைத்து விளையாட்டுப் போட்டியினை நடாத்திவிட முடியாது. தற்போதய பொருளாதார ஏற்றத்தின் மத்தியில் 90 ஆயிரம் ரூபாய் தேவை என பாடசாலை மதிப்பீட்டுக்குள் கணிப்பீடு செய்துள்ளது. அதற்கு பணம் சேகரிப்பதாயின் ஒரு பிள்ளையிடமிருந்து 1402 ரூபாய் அறவிடவேண்டி ஏற்படும். அந்தளவான தொகையினை வழங்கக்கூடிய நிலையில் பெற்றோரின் பொருளாதார நிலைமை காணப்படவில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று பிள்ளைகளும் இப்பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள். அவர்களிடத்தில் பெருந்தொகை பணத்தினை அறவிட முடியாது. இந்த நிலையில்தான் வருடந்தோறும் பழைய மாணவர் சங்கம் எமது பாடசாலை விளையாட்டுப் போட்டியினை நடாத்துவதற்கான செலவினத்தில் தன்னாலான பங்களிப்பினை செய்து வருகின்றது. என்ற தகவலையும் விமர்சிப்பவர்களுக்கு முன்வைக்க விரும்புகின்றோம்.